பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372 தமிழர் நாட்டுப் பாடல்கள் அலை மேலே கப்பலோட்டும்-ஏ தங்கம் அறிவுள்ள நம்ம துரை-ஏ தங்கம் இரும்புக் குறிச்சிகளாம்-ஏ தங்கம் இங்கிலீசு புஸ்தகமாம்-ஏ தங்கம் இருந்து கணக்கெழுதும்-ஏ தங்கம் இன்பமுள்ள நம்ம துரை-ஏ தங்கம் அல்லாரும் எழுதும் பேனா-ஏ தங்கம் அந்தப் பேனா, இந்தப் பேனா-ஏ தங்கம் நம்ம துரை எழுதும் பேனா-ஏ தங்கம் சரியான தங்கப் பேனா-ஏ தங்கம் அல்லாரும் குடிக்குந் தண்ணி-ஏ தங்கம் ஆத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி-ஏ தங்கம் நம்ம துரை குடிக்குந் தண்ணி-ஏ தங்கம் காரமான கள்ளுத்தண்ணி-ஏ தங்கம் அல்லாரும் ஏறும் வண்டி-ஏ தங்கம் கட்ட வண்டி மொட்ட வண்டி-ஏ தங்கம் நம்ம துரை ஏறும் வண்டி-ஏ தங்கம் சரியான கோச்சு வண்டி-ஏ தங்கம் எல்லோரும் சண்டை செஞ்சா-ஏ தங்கம் கத்தி வரும் கொடுவா வரும்-ஏ தங்கம் நம்ம துரை சண்டை செஞ்சா-ஏ தங்கம் தலைக்கு மேலே பாணம் வரும்-ஏ தங்கம் சாரி சவுக்கு குதிரை-ஏ தங்கம் சவாரி போர குதிரை-ஏ தங்கம் பூக்குதிரை மேலே ஏறும்-ஏ தங்கம் பொன்னு முடி நம்ம துரை-ஏ தங்கம்

சேகரித்தவர்;கவிஞர் சடையப்பன் இடம்; சக்கிலிப்பட்டி, அரூர், தருமபுரி மாவட்டம்.

      தரும துரை
  மன்னர்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் புகழ்ந்து பாடப்படுவது அரிது. ஏனெனில் நாட்டு மக்கள் மன்னர்களை நேரில் காண்பதோ, அவர்களது அன்பை நேரில் பெறுவதோ முடியாது. சமீப கால மன்னர்கள் மக்களுடைய வாழ்க்கையில் புலப்படும்படியான பொதுநலப் பணிகள் எவற்றையும் செய்த தில்லை. தாங்கள் வாழ மாட மாளிகைகளையும், தங்கள்