பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374 தமிழர் நாட்டுப் பாடல்கள் இளைஞன் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே ஆந்தை போல விழித்துக் கொண்டு நிற்கிறான்.

ஆண்:சீப்பு சீப்பா வாளப்பளம் சீனி சக்கரை எள்ளுருண்டை சக்கரைத் தின்னா விக்கலெடுக்கும் தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே பெண்: கும்மியடிக்கற பெண்களாண்டே கூட்டம் என்னா இங்கே ஆம்பிளைக்கி முந்தாணி தாங்குது ஒத்திக்குங்க முக்காலி போடறோம் ஒக்காருங்க ஆண்: கொத்து கொத்தாப் புள்ளே வாளப்பளம் கோதுமை சர்க்கரை எள்ளுருண்டை. சர்க்கரை தின்னாலே விக்கலெடுக்கும் தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே தன்னா தானான தானான-தன தான தனனனன னானன வட்டார வழக்கு: வாளப்பளம்-வாழைப்பழம். குறிப்பு: ழகரத்தை தென் தமிழ் நாட்டில் ளகரமாகவே உபயோகிப்பர். சேகரித்தவர்: இடம்:அரூர் S.S.சடையப்பன் தருமபுரி மாவட்டம்.

    பட்டணத்தைப் பார்த்த 
       பட்டிக்காட்டான்

 வெள்ளைக்காரன் ஆளும் காலத்தில் பட்டிக்காட்டான் பட்டணம் பார்க்க மனைவியோடு போனான்.அங்கே அவன் கண்டவற்றை தான் முன் அறிந்திருந்த பொருள்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறான். விமானம், தந்தி, மின்விளக்கு இவை யாவும் அவனுக்கு அதிசயத்தை உண்டாக்குகின்றன.
    மானத்திலே போகுது பார் 
    மாடில்லாத வண்டி-அது 
    மஞ்சிட்டு போல் பேசுது பார் 
    வெள்ளெக்காரன் கம்பி