பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 375 கச்சேரி மேலெரியும் காந்தி சோதி வெளக்கு-அது எந்நீதமாய் எரியுது பார் வெள்ளெக்காரன் விளக்கு பட்டணத்தை பாக்க பாக்க பசியெடுக்கவுமில்லெ-நம்ம பட்டிக்காட்டை சுத்திச் சுத்தி பாக்க மனசு வல்லே சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் அரூர், தருமபுரி மாவட்டம்.

   கூலிசெய்யக் காலமாச்சே!

கிராமப்புறத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த விவசாயிகள், பருவ மழையின்மையாலும் வரிப்பளுவினாலும் கடன்பட்டு நிலத்தை இழந்து விடுகிறார்கள், விவசாயக் கூலிகளாக வேலை செய்து பிழைக்கிறார்கள். கொஞ்சம் காணியுள்ள வீட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்குக் கூலி வேலை செய்யும் இளைஞனொருவன், மணமகனாக வாய்க்கிறான். திருமணமான மறுநாள் கூழ் குடிக்க வேண்டுமானால், மணமகனும் மணமகளும் கூலி வேலை செய்தாக வேண்டும். புது மண உறவின் இன்பத்தை நுகர விடுமுறை கிடைக்கவில்லை. 'கொட்டவந்த மேளக்காரன் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்னால் மண் எடுத்துக் கூலி வேலை செய்யக் காலமாகி விட்டதே', என்று ஏங்கிப் பாடுகிறாள் மணமகள். அரைச்ச மஞ்சா ஏழுருண்டை கண்ணான நாதா-என் மன்னவனே சாமி அரைக்காத மஞ்சா ஏழு மஞ்சா கண்ணான நாதா கட்டான வெத்திலை ஏழு வெத்திலை கண்ணான நாதா-என் மன்னவனே சாமி கட்டான வெத்திலை ஏழு வெத்திலை கண்ணான நாதா எடுத்து வையும் சீரு மேலே கண்ணான நாதா-என்