பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 381

வட்டார வழக்கு விசுவாசம்-ஆட்சிக்கு அடங்குவது. குறிப்பு: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இப்பாடல் எழுந்திருக்கவேண்டும்.

உதவியவர்: பெ. இராமநாதன் இடம்: போத்தனூர் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும்

அத்தை மகனும், மாமன் மகனும், மணமகன் உற முறையினர். அவர்கள் ஊற்றுத் தோண்டினார்கள். தண்ணி இறைத்து தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறார்கள்; அண்ணனும் ஊற்றுத் தோண்டினான். அதன் தண்ணீரும் தோட்டத்துக்குப் பாய்கிறது. அவள் இரண்டு தோட்டத்திலும் வாய்க்கால் விலக்கி வேலையில் உதவி செய்கிறாள். மைத்துனர்களைக் கேலி செய்வதற்காக இப்பாடலை பெண் பாடுகிறாள்.

ஆத்திலே ஏலேலோ ஊத்துப் பறிச்சு அத்தை மகன் ஏலேலோ இறைக்கும் தண்ணி அத்தனைக்கும் ஏலேலோ உப்புத் தண்ணி என் பொறுப்பு ஏலேலோ அத்தனையும் எறைக்கும் தண்ணி அத்தனையும் ஏலேலோ நல்ல தண்ணி மானத்திலே ஏலேலோ ஊத்துப் பறிச்சு மாமன் மகன் ஏலேலோ ஏத்தம் வச்சு மானுக் கொம்பு ஏலேலோ ஏத்தம் வச்சு மாமன் மகன் ஏலேலோ எறைக்கும் தண்ணி அத்தனையும் உப்புத் தண்ணி ஏலேலோ A519-25