பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 தமிழர் நாட்டுப் பாடல்கள்

வட்டார வழக்கு: என் பொறப்பு-அண்ணன்.

உதவியவர்: நல்லம்மாள் இடம்: பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

சோம்பேறி

அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊர் சுற்றுவதும், உண்பதும் உறங்குவதுமே அவன் வேலை. உழைப்போர் நடுவே ஒரு புல்லுருவி இருந்தால், அவனுக்கு வசைதான் கிடைக்கும். ஆனால் அவனுக்கு மானமிருந்தால் தானே!

வட்டம் போடும் வடக்குத் தெரு வந்து நிற்கும் தெற்குத் தெரு உங்குறதும் நெல்லுச் சோறு உறங்குறதும் கார வீடு

வட்டார வழக்கு : உங்குறது-உண்கிறது.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.

சோம்பேறி

'யாரோ உழைக்கிறார்கள், நான் சாப்பிடுகிறேன். எங்கேயோ நெல் விளைகிறது. நெல் விளையும் ஊரின் ராஜா என் அப்பா. சீலை நெய்யும் ஊரில் இருப்பவள் என் அம்மா. ஆடு மேய்ப்பவன் என் அண்ணன். பறவை சுடுவது என் தம்பி. இத்தனை பேரும் வேலை செய்து ஒன்றொன்று கொடுத்தால் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?' என்று கேட்கிறான் சோம்பேறி. தன்னைத்தானே கேலி செய்து கொள்ளுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.

கட்டக் கட்ட புளியமரம் தென்புறத்திலே காராங்கி நெல் விளையும் பட்டணத்திலே பட்டணத்து ராசா எங்கையா பாளையங் கோட்டை சீலைக்காரி எங்கம்மா வெள்ளரிக்காக் கூடைக்காரி எங்கக்கா வெள்ளாடு மேய்க்கிறது எங்கண்ணன்