பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 383

சிட்டுக்குருவி தெரிக்கிறது என்தம்பி சுட்டுச் சுட்டு திங்கிறது நான்தானே

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: பாளையங்கோட்டை

ரெங்கத்திலே

அயல்நாடு சென்று வந்தவர்கள், பெண்கள் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகப் பல பொய்க் கதைகளை புனைந்து கூறுவார்கள். இரங்கூனுக்குப் போய் திரும்பி வந்தவன் சொல்லுவதையும் அதனை நம்பாமல் கதை கேட்ட பெண்கள் கூறுவதையும் கேளுங்கள்.

(ரங்கூன் சென்று வந்தவன்)

அரிசி அரைக்கால் ரூவா அரிக்கஞ்சட்டி முக்கால் ரூவா சோத்துப்பானெ ரெண்டு ரூவா சொகுசான ரங்கத்திலே

(கேட்பவர் கூறுவது)

ஓடையில் கல்லெறக்கி ஒன்பது நாள் பாலங்கட்டி பாலத்து மேலிருந்து பாடிவாரார் நம்ம சாமி காத்தோரம் சேக்குகளாம் கைநிறைஞ்ச வாச்சுகளாம் மணி பார்த்து வாருமையா மகுட துரைராச சிங்கம்

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.

விசிறி கொண்டுவா

கணவன் சோம்பேறியாக அலைந்தான். மனைவி, அழாத குறையாக அவனை வேலைக்குப் போகும்படி வேண்டுகிறாள். ஆனால் அவனோ, அவள் சொல்லைக் கேளாமல் ஆற்று மணலில் சூதாடி காலம் கழிக்கிறான். மாலை நேரமானதும், வீட்டுக்கு வந்து சாப்பிட உட்காருகிறான். மனைவி அவனுக்கு எதுவும் பரிமாறவில்லை. அந்நேரத்தில் அடுப்பங்கரையிலிருந்து, அவனது மனைவி பாடுகிறாள்.