பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

388

தமிழர்நாட்டுப் பாடல்கள்



வழி நடைப் பாட்டு

தமிழகத்தில் கும்பினியார் பாளையப்பட்டுக்களுடன் பல போர்கள் நடத்தினர். அவர்களின் ஒரே மாதிரியான உடை, தொப்பி, சப்பாத்து அணிவகுப்பு, துப்பாக்கி, பீரங்கி கருமருந்து போன்ற அனைத்தும் தமிழர் அறிந்திராத போர்ச்சாதனங்கள். இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு வெள்ளையரைப் பற்றி அதிசயமான எண்ணம் வளர்ந்தது. வெள்ளையரின் வெற்றிகள் பொதுமக்களை மிகவும் திகைக்கச் செய்தது. வெள்ளையர்கள் அமானுஷ்யமான திறமையுடையவர்களாக மக்களால் கருதப்பட்டனர்.

ஓர் நாடோடிக் கவிஞன் அவர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறான். அம்மாதிரியான பாடல்கள் சமீப காலம் வரை நமது ஏட்டுப் பள்ளிக்கூடங்களில் கோலடிப் பாட்டாகப் பாடப்பட்டு வந்தன.

படைகள் வெள்ளைக்காரத் துரைகள்
பிடிகள் நீட்டி சலாம் செய்தார்
பட்டாளத்திலே தம்பூரடிக்கிற
பயணம் கேட்டுத் தாங்களே
அடிகள் பிடிகள் கொடிகள் மாறி
அணைத்துத் துப்பாக்கி தாங்கியே
அரசன் கருணை ரசமட்டம் துரை
அனைவரும் வந்து கூடினார்
அந்தச் சணம் பட்டாளம் கொஞ்சம்
அனேக வெள்ளைக் காரரும்
ஆயுதங்களைக் கொண்டு வந்து
மேல் பீரங்கி ஏத்தியே
செந்தூரந்தக் கர்னல் ஆட்டி
செந்தூரத்த மேட்டியும்
சூதுடன் படை வருகு தென்று
சூரங் காட்டி கோபமாய்
நெறித்துப் படைகள்
முறுக்குச் சாத்தி முறுக்கு மீசையும் கையுமாய்
பல்லைக் கடித்துக் கவர்னர் துரைகள்
படைகள் விரட்டிக் குத்தவே
குத்தும் படைகள் திரண்டு வந்து
கோட்டைக் கொத்தளம் பிடிக்கவே
கோட்டைக் கொத்தளம் பிடித்துக் கொண்டு