பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 389

கூர்ந்து தெற்கே புறப்பட்டார் மார்ச் மாதம் கோட்டைப் பிடித்து வயணமாக நடந்து தான் மன்னன் கர்னல் சின்னத் துரைகள் மகிழ்ந்து காகித மெழுதவே சென்னப்பட்டணம் கவர்னர் துரைகள் வர்ணமாகக் கேட்டுத் தான் செலவுக்கென்ன செய்வோ மென்று சீறி மனதில் எண்ணியே இளவலுடனே லட்ச ரூபாய் இனாமாகத் தருகிறேன் அமைத்து மருந்து குண்டு பீரங்கி சமைத்து ரங்க ரங்கரே குண்டு பீரங்கி சேர்த்துத் துரைகள் குறிச்சி கட்டிலிலிருக்கவே கமான் சொல்லிய பட்டாள மெல்லாம் கலந்து கூடி நடக்கவே.

வட்டார வழக்கு: சூரங்காட்டி-சூரத்தனத்தைக் காட்டி: கமான்-ஆங்கிலச் சொல் (Come on).

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு இடம்: மீளவிட்டான்.