பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

1.S.S. போத்தையா: இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் பெரும்பாலானவை இவர் சேகரித்து அனுப்பியவை. இந் நூலில் சேர்க்கப்பட் டுள்ள பாடல்களில் அம்பாப்பாட்டு, கோணங்கி பாட்டு போன்ற அபூர்வப் பாடல்களை இவர் சேகரித்து அனுப்பியுள்ளார். இவர் என் பழைய மாணவர். தங்கம்மாள்புரத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாடல்களைச் சேகரிக்க இவருக்கு உதவியவர்கள்:

மேல் மந்தை பெத்தையா
மீனாட்சிபுரம் - வித்துவான் ராமசாமி
உச்சிநத்தம் - கே. ராமசாமி
உச்சிநத்தம் - நாகம்மாள் முதலியோர்

2.S.M.கார்க்கி: இவர் சிவகிரியைச் சேர்ந்த வில்லுபாட்டுக் கலைஞர், கணிரென்ற குரலில் நாட்டுப் பாடல்களைப் பாடும் திறமை படைத்தவர். சிவகிரி வட்டாரத்தில் கிராம மக்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் பலவற்றை சேகரித்து அனுப்பியுள்ளார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல அவர் சேகரித்து அனுப்பியவையே. சிவகாசிக் கலகத்தைப் பற்றியும், செந்தட்டிக் காளை வரலாறு பற்றியும் இத்தொகுப்பில் வெளியாகும் அபூர்வமான பலபாடல்கள் அவர் அனுப்பி வைத்தவை.

3.M.P.M. ராஜவேலு: இவர் தூத்துக்குடிக்கருகிலுள்ள மீளவிட் டான் கிராமத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி கடற்கரையில் வாழும் மக்கள் வாழ்க்கையும், பனைமரக் காடுகளின் நடுவிலுள்ள சிற்றுரர்களில் வாழும் மக்களது வாழ்க்கையையும் சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அனுப்பியுள்ளார்.

4.குமாரி P. சொரணம்: பி. ஏ. முதல் வருட வகுப்பில் படிக்கும் மாணவி. ஒப்பாரிப் பாடல்கள் சிலவும், தாலாட்டுப் பாடல்கள் சிலவும், மாரியம்மன் பாடலொன்றும் தனது தாயாரிடம் கேட்டு எழுதி அனுப்பி வைத்தார். இவர் எனது பழைய மாணவி.