பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

33


மேற்குறித்த நால்வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

5.கவிஞர் S.S. சடையப்பன்: தருமபுரி, அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர். நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற்கருவியை இவர் உபவாத் தியமாகப் பயன் படுத்துகிறார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை. தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன.

6.கு. சின்னப்ப பாரதி: இவர் சேலம் மாவட்டம் நாமக்கல் லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சேகரித்தனுப்பிய கொங்கு நாட்டுப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றை உதவியவர்களின் பெயர்கள் பாடலுக்கு அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

7.வாழப்பாடி சந்திரன்:இவர் ஒர் ஒவியர் எழுத்தாளரும் கூட. சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர். மலை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர்கள் பாடும் பாடல்களைச் சேகரிக்க முயன்று வருகிறார்.

8.மங்கை: முதல் தொகுப்பின் குறிப்புரைகள், ஆய்வுரைகளை எழுதத் துணை செய்தவர். நாட்டுப் பாடல்களை தொகுப்பதற்கும், அவற்றை வகைப் படுத்துவதற்கும் உழைத்தவர். சேகரித்தவர்களோடு கடிதப் போக்குவரத்து நடத்தி வட்டார வழக்குகளைப் பற்றியும் சமூகவியல் பழக்கங்கள் பற்றியும் அறிந்து நூலில் எழுதியவர். ஆராய்ச்சியிலும், தமிழாராய்ச்சி நிறுவனம் மார்ச்சு 26, 27ந் தேதிகளில் நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியவர்.

9.நா. வானமாமலை: 15 ஆண்டுகளாக நாட்டுப்புற இயல் தொகுப்பாளராகவும், ஆய்வாளராகவும் பணிபுரிகிறார். நியூ செஞ்சுரி வெளியீட்டாளர்கள் இத் துறையில் இவரது நூல்கள் மூன்றை வெளியிட்டுள்ளார்கள். மதுரைப் பல்கலைக்கழகம் இவர் தொகுத்து, ஆராய்ச்சி குறிப்புகள், முகவுரை எழுதிய ஆறு நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். திராவிட மொழியியல் கழகம் (கேரளா) இவரை