பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. தமிழர் நாட்டுப் பாடல்கள்

நாட்டுப்புறவியல் முதுநிலை ஆய்வாளராக ஓராண்டிற்கு (1965-66) நியமித்தது. இவர் பதவிக்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்தி (Fellowship thesis) ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள் ளார். பல நாட்டுப்புறவியல் கருத்தரங்குகளில், கட்டுரை களைப் படித்தும், தலைமை வகித்தும் பணிபுரிந்துள்ளார். தமிழாராய்ச்சி நிறுவனம் (அடையாறு) நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கில் Keynote paper படித்தும், ஒரு அமர்வுக்கு தலைமை வகித்தும் பங்குப் பெற்றார். ஆராய்ச்சி, தாமரை, Social Scientist, Folk Lore, Nova Orientalani (செக் மொழி) முதலிய பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.