பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழவும் தொழிலும்

397


கண்டும் கேட்டும், ரங்கநாதர் கோயில் அரையரொருவர் அவற்றைக் கற்றுக்கொள்ளுவதற்காக பறைச்சேரியிலேயே சென்று தங்கிவிட்டாரென்று ரீரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அழகர் கோயிற் பள்ளியில் நடுகைப் பாடல்கள் பல காணப்படுகின்றன. அதைப் பின்பற்றி எழுந்த பள்ளுகளனைத்தும் நடுகைப் பாடல்களுக்கு இடம் கொடுக்கின்றன.

  தற்பொழுது முயன்றால் இன்னும் மறைந்து விடாமல் வழங்கிவரும் பாடல்களைச் சேகரிக்கலாம்.
  நெடுநேரம் குனிந்து நட்ட பெண்ணொருத்தி நிமிர்ந்து பார்க்கும்பொழுது வயல் வரப்பில் அவளது காதலன் அவளை நோக்கிப் பாடுகிறான்.
     நாலு மூலை வயலுக்குள்ளே
     நாத்து நடும் குள்ளப் பெண்ணே 
     நாத்து நடும் கையாலே - என்னையும் 
     சேத்து நடலாகாதோ?


சேகரித்தவர்:
இடம்:
வழப்பாடி சந்திரன்
சேலம மாவட்டம்
    நாத்துப் பறியே நடுவப் பறியே 
    நட்டுக் குனிந்து நிமிந்து நிக்கும் 
    நாணயமே, கண்ணே 
    நாந்தானடி பாடியது 
    உன்னைத் தாண்டி பொண்ணே  
சேகரித்தவர்
இடம்
S.M.கார்க்கி
சிவகிரி
நெல்லை மாவட்டம்
நடுகை-2

விவசாய வேலைகளில் மிகவும் கடினமானது, நாற்று நடுவதுதான். இவ்வேலையைச் செய்வது, பள்ளர், பறையர் குலப் பெண்களே. வரப்பைச் சுற்றி ஆண்கள் நின்றுகொண்டு A519-26