பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



396

தமிழர்நாட்டுப் பாடல்கள்


வாலுக்குச் சல்லடமாம்
                     வாகுக்கை பொன்னாலே
                     கொம்புக்குக் குப்பிகளாம்
                     கொனவாலு சல்லடமாம்
                     துக்கி வைக்கும் கால்களுக்கு
                     துத்திப் பூ சல்லடமாம்
                     எடுத்து வைக்கும் கால்களுக்கு
                     எருக்கம் பூ சல்லடமாம்
                     மண்டியிடும் கால்களுக்கு
                     மாதளம் பூ சல்லடமாம்
                     இத்தனையும் ஒப்பதமாம் - எங்க
                     சப்பாணிப் பிள்ளையார்க்கு
                     கட்டக் காட்டுக் கொல்லையிலே - ரெண்டு
                     காரிக்காளை மின்னேரு
                     காரிக்காளை வித்த பணம்
                     கருத்தப் பொண்ணு மார்மேலே
                     செங்காட்டுக் கொல்லையிலே - ரெண்டு
                     செக்காளை மின்னேரு
                     செக்காளை வித்த பணம்
                     செவத்தப் பொண்ணு மாருமேலே

சேகரித்தவர்:
இடம்:
கவிஞர் சடையப்பன் அரூர்,
தருமபுரி


நடுகை-1

நடுகை வேலை பள்ளர், பறையர் சாதிப் பெண்கள் மட்டுமே செய்யும் வேலை. பருவ வேலைகளிலேயே நாற்று பிடுங்கி நடுவதுதான் மிகவும் துட்பமான வேலை. முதுகு குனிந்து நெடு நேரம் சரியான இடைவெளி விட்டு நாற்றை நட்டுச் செல்வதற்குப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும். நடுகைப் பாடல்கள் காதலைப் பொருளாகக் கொண்டனவும் அனுதாபம், இரக்கம், கொடுமை, பரிதாபம் இவைகளைப் பொருளாகக் கொண்டனவும் உள்ளன.

நடுகைப் பாடல்கள் தற்பொழுது நிரம்பக் கிடைப்பதில்லை. ஆனால் சுமார் 600 வருஷங்களுக்கு முன்னால் நடுகைப் பாட்டையும் அதற்கு முன் பள்ளர் ஆடும் ஆட்டத்தையும்,