பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



400

தமிழர்நாட்டுப்பாடல்கள்

தங்கத்தின் வயலில் நடுகை நடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஒரு பெண் பாடத் தொடங்கினாள்; மற்றைப் பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.

         ஆராளு நூறாளு
         அருபத்தி ரெண்டாளு
         ஆவுடைத் தங்கம் கையாளு
         ஆல வட்டம் போடு தில்ல
         அம்பது ஆள வச்சு
         ஆதரவா வேலைவாங்கி
         கூப்பிட்டுப் பேரு போடும்
         குணமுள்ள ஆவுத்தங்கம்

வட்டார வழக்கு: ஆராளு-யார் ஆளு?; ஆல வட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கும் அழகு, ஆவுத்தங்கம் ஆவுடைத்தங்கம் என்பது.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி
நெல்லை மாவட்டம்

நடுகை-5

வயல் வரப்பில் நின்று நாற்றுக் கட்டை இளைஞர்கள், நடும் பெண்களை நோக்கி எறிகிறார்கள்.

அவர்களில் ஒருவன் தன் காதலி வரப்பருகே வரும்பொழுது எல்லோருக்கும் பொதுவாக சில வார்த்தைகளும், அவள் காதில் மட்டும் விழும்படியாகச் சில வார்த்தைகளும் சொல்லுகிறான்.

(எல்லோரும் கேட்க)

            நாத்துப் புடுங்கி வச்சேன் 
            நடுவத் தொளி ஆக்கி வச்சேன்
            நாத்து நடும் பொம்பளையா 
            சேத்து நட மாட்டியாளோ

(காதலி மட்டும் கேட்க)

            பொட்டிட்டு மையிட்டு 
            பொய்யக் கரை தீர்த்த மாடி