பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழவும் தொழிலும்

401


        நட்டுட்டும் போற புள்ளை 
        நயன வார்த்தை சொல்லிரம்மா

வட்டார வழக்கு தொளி-சேறு; பொம்பிளையா-பெண் பிள்ளைகாள்; மாட்டியாளா-மாட்டீர்களா பொய்யக்கரைபொய்கைக் கரை, குளக்கரை; நட்டிட்டு-நட்டு விட்டு; நயன வார்த்தை-கண் சாடை.

குறிப்பு: புள்ளை (நெல்லை மாவட்டத்தில் பெண்களைப் புள்ளை என்பது சில சாதிகளில் வழக்கு) மேற் குறித்த பேச்சு வழக்கில் உள்ளவை.

இப்படிப் பிறர் முன் பேசக்கூடாது என்பதைக் குறிப்பாகக் கூறுகிறாள் காதலி.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி வட்டாரம்.
               சரசரணு வந்திருங்க 
               சவுக்கையிலே இருந்திருங்க 
               காரியமே உண்டானா 
               கலகலணு பேசிருங்க

வட்டார வழக்கு: சரசரணு, கலகலணு-விரைவு குறிக்கும் இரட்டைச் சொற்கள் வந்திருங்க, இருந்திருங்க, பேசிருங்க வந்து விடுங்கள், இருந்து விடுங்கள், பேசி விடுங்கள்.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி வட்டாரம்.

களை எடுத்தல்-1

நடுகையைப் போலவே களை எடுத்தலும் பெண்களின் வேலையாகும். பயிரைப் போலவே தோன்றும் களைகளைக் கூர்ந்து நோக்கிப்பிடுங்கியெடுக்கவேண்டும். சற்று அயர்ந்தால் களைக்குப் பதில் பயிர் கையோடு வந்துவிடும். களை எடுத்தலும் நடுகையைப் போலவே சலிப்புத் தரும் வேலை. சலிப்புத் தோன்றாமலிருக்க வயல் வரப்பிலுள்ள ஆண்களும் வயலில் களை எடுக்கும் பெண்களும் சேர்ந்து பாடுவார்கள்.

        வாய்க்கால் வரப்பு சாமி
        வயக் காட்டுப் பொன்னுசாமி,