பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



407

உழவும் தொழிலும்


நிரம்பினாலும், நாற்று வளர்ந்து, பொதி தள்ளி, மணி பிடிக்கும் தறுவாயில் ஏரி வற்றிப் போகும்.

அங்குமிங்குமுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்குக் கீழே சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக, உழவர்கள் பள்ளத்திலுள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காகப் பனையோலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப்பெட்டிகளைப் பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும், கயிறுகளைக் கட்டிப் பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இவ்வேலை மிகவும் சலிப்பைத் தருவதாயினும் வேலையின் பயனை எண்ணி அவர்கள் நீண்ட நேரம் உழைப்பார்கள். சலிப்புத் தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவுக்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடுவார்கள்.

நீரை மடையிலேற்றுவதற்கு வேறொரு கருவியும் உள்ளது. அதன் பெயர் இறைவை மரம். ஒரே மரத்தைத் தொட்டி போல் குடைந்து ஒரு ஓரத்தில் கைப்பிடிபோல் அமைத்திருப்பார் கள். அதன் நடுவே கயிற்றைக் கட்டி முக்காலி போல மூன்று கம்புகளைத் தரையில் நாட்டி அதனோடு, இறைவை மரத்தை இணைப்பர். இறைவை மரத்தின் தொட்டி போன்ற பகுதி தண்ணீரினுள் இருக்கும் கைப்பிடியை மேலும் கீழுமாக அசைத்தால், தண்ணீர் பெட்டியினுள் ஏறி மடையினுள் பாயும். இறைவை மரத்தை இயக்க ஒரே ஒரு ஆள் போதும். இப்பாடல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகுதியாக பாடப்ப டுகிறது. தென்னாற்காடு மாவட்டத்திலும் காலால் மிதித்து ஏற்றம் இறைப்பவர் ஏற்றப் பாட்டுப் பாடுவர். மேலே ஒருவன் ஏற்றத்தை மிதிக்க கீழே ஒருவன் நின்று கிணற்றிலிருந்து வெளிவரும் வாளியைத் தூக்கித் தண்ணீரை மடையில் செலுத்துவான். ஏற்றத்தின் மேலுள்ளவன் முதலடியைப் பாடி முடித்தபின் கீழேயுள்ளவன் அடுத்த அடியைப் பாடுவான். அப்பாடல்களில் சில விடங்களில் பாரத இராமாயண பாத்திரங்கள் வருவர்.

இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஏற்றப் பாட்டுகள் பொருளைவிடச் சந்தமே முக்கியமாகத் தருகிறது. பிள்ளையார் வழிபாடு, காதல் பிதற்றல்கள், திருவிழா வர்ணனைகள், உடல்வலி தோன்றாமலிருக்கக் கடவுளை வேண்டுதல் முதலிய பல பொருள்கள் தெளிவில்லாமல் குழம்பி