பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

தமிழர் நாட்டுப் பாடல்கள்


வருகின்றன. நட்டபயிர் விளையவேண்டும், அறுவடைக்குப் பின் திருவிழாக்கள் நடக்கவேண்டும், திருவிழா விளையாட்டுகளில் கவலையெல்லாம் மறக்கவேண்டும் என்ற இன்ப ஆர்வம் ஏற்றப் பாட்டுகளில் பொதுவாக இருப்பதைக் காணலாம்.

ஏற்றப் பாட்டு-1

பிள்ளையாரே வாரும் பிள்ளைபெருமாளே இளைய பிள்ளையாரே எண்ணித் தர வேனும் எண்ணித் தந்தாயானால் என்னென்ன படைப்பேன் பச்சரிசி தேங்காய் பாலு பணியாரம் கொத்தோடு மாங்காய் கொலையோடு தேங்காய் ஈனாக் கிடாறி இடது கொங்கைப் பாலும் வாலைக் குமரி வலது கொங்கைப் பாலும் தெற்கு மலையேறி தேக்கிலைப்பறித்து தேக்கிலைக்கும் தண்ணீர் தெளிக்கும் பிள்ளையாருக்கு வடக்கு மலை ஏறி வாழை இலை பறித்து வாழெலைக்கும் தண்ணி வைப்போம் பிள்ளையாரே ஓம் முருகா வேலா ஓடி வந்தாயானால் ஓடி வந்தாயானால் கோடிப் பயன் உண்டு ஒரு பதிலே நில்லு சிறுவன் தொலை மேலே ஒத்த மரம் நெல்லி உயர்ந்த மரம் தோப்பு ஒத்திரைத்தாயானால் சித்திரக் கார் பாயும்