பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
409

உழவும் தொழிலும்


ஒத்த குரல் ஓசை நித்த மணிப் பூசை ஓடாதே மானே ஒளிந்திருப்பான் வேடம் ஓடக் கரையோரம் வேடப்பய காவல் ஒரு பணமாம் செம்பு ஒளி விடுதாந்தேரு தேரு திரண்டோட மாலை கழண்டோட ஒடுதையா நூறு ஒடுதையா நூறு பாப்பாரப் பெண்ணே மோக்கலையா தண்ணி மோக்கலேடா அண்ணா முகங்கழுவப் போறேன் பாலு என்னும் பயலே தோழனென்னும் தோழர் பாலு கொண்டு போன பாலகனைக் கானோம் தயிரு கொண்டு போன தங்கம் வரக் காணோம் இருண்ட நேரம் தோழா இலுப்பமரம் தாண்டி இருக்கச் சொல்லிப் போன இளமயிலைக் காணோம் இருப்பதென்றால் சொல்லு கொடுப்போம் கலநெல்லு இருள் ஆந்தை கூவ மருள் ஆந்தை சாய இரும்புலக்கை கொண்டு திரும்பிவிட்டான் தேரை இரும்பு வழித்துனாம் துலுக்கமல்லி வாசல் இருந் தடிக்கப்பந்து நடந்தடிக்கச் சோர்ந்தான் இருட்டி வந்த மேகம் மருட்டி மழை பெய்ய