பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
411

உழவும் தொழிலும்


ஆத்தாங் கரையோரம் ஆனை விளையாட்டாம் ஆத்தரளி தின்றால் மாத்திரைகள் உண்டோ ஏழு மூங்கி வெட்டி எமதுரண்டி போட்டான் ஏழைக்குலப் பெண்ணாம் சோலைக் குயில்போல ஏழை வச்சான் வாழை ஏறி வெட்டலாமோ ஏழைக்குல வண்ணான் சாதிலம் கேட்டான் எழுத்தாணி கொண்டு எழுதிய குடமாம் குமரியின் தலைமேல் எழுக்கோடா செட்டி பருசப்பனம் பத்து எழுத்து வர்ண சேலை வெளுத்து வாடா வண்ணா எங்கமதயானை கொம்பு மதயானை வங்கணக் குறத்தி எங்கிட்டு வருது தங்கச்சி வரிசை எட்டிப் பூப்பூக்க பொட்டில் இடும் மையாம் எட்டுதில்லை தண்ணி வத்து தில்லை பொய்கை செம்பருத்தி காயாம் இளம் பருத்தி நூலாம் துவக்குதடி பாக்கு தோழியிடம் சொல்ல மணக்குதடி மஞ்சள் மாரியிடம் சொல்ல தோழி கட்டும் சேலை தொண்ணுறு முழமாம் நான் அளந்து பார்க்க நாற்பது முழமாம்