பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

தமிழர் நாட்டுப் பாடல்கள்


தோழி கடல் ஏற
வாரி அலைமோத தோத்துப்போன சேவல்
நேத்து வந்து கூவ தோப்புக்குள்ளவாடி
தொகுத்தே கவி பாட தோப்பிலுள்ள மாங்காய் காப்பணமாம் நூறு
சென்றதையா நூறு
சொல்லத் தொலைமேலே வந்ததையா நூறு
வைக்கத் தொலைமேலே ஆலையும் கரும்பும்
ஆடி வர நூறு
சோலையும் கரும்பும்
சுத்திவர நூறு
தங்க மயில் ஏறி
சாமி வர நூறு
புள்ளி மயில் ஏறி
வள்ளி வர நூறு
ஒற்றை அடிபோல
சுட்ட ரொட்டி நூறு
ஆனை அடிபோல
அதிரசங்கள் நூறு
குதிரை அடிபோல கொளுக்கட்டைகள் நூறு
மாடு கட்டும் தும்பு
மறு விலங்கு நூறு
கன்று கட்டும் தும்பு
கயிறனையும் நூறு
எருது கட்டத் தும்பு
எடுத்தனையா நூறு
ஆனதைய்யா நூறு
ஆறுமுக வேலா
ஒரு நூறும் போல
திரு நீறும் பூசி
இரு நூறும் பாழ்
இரணியந் தேர் ஓடி