பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
413

உழவும் தொழிலும்


முன்னுறும் பாடி
மூவணத் தேர் ஓடி
நானுறும் பாடி
நாக நாதர் ஒடி
ஐந்நூறும் பாடி
ஐயனார் தேரோடி
அறு நூறும்பாடி
ஆரணித் தேர் ஒடி
எழுநூறும் பாடி
இரணியந் தேர் ஓடி
எண்ணுறும் பாடி
ஈஸ்வரத் தேரோடி
தொளாயிரமும் பாடி
ஆயிரமாங் கோடி
ஆயிரத் தைச் சேர்த்து கோபுரத்தைப் பார்த்து
கோபுரத்து மேலே
கும்பத்திலே தண்ணி
இஞ்சிக்கும் பாச்சி எலுமிச்சைக்கும் பாச்சி மஞ்சளுக்கும் பாச்சி
மற்படுதாம் வெள்ளம் கைமாத்துக்காரர்
கச்சைக் கட்டும் தோழர்
நான் இரைத்த நேரம்
நீ இரைக்க வாடா
கை வழியே வாடா
கைவலியும் தீர
மேல் வழியே வாடா
மேல்வலியும் தீர
காளியாத்தா தாயே
கால்கள் வலியாமல்
மீனாட்சி அம்மா
மேலுவலியாமல்
கருப்பண்ண சாமி
கைகள் வலியாமல்
முத்து முனியாண்டி
உத்த துணை நீயே