பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

தமிழர் நாட்டுப் பாடல்கள்


 மானுக் கொம்பு ஏத்தம் வச்சு
  தில்லாலங்கிடி லேலம்
மாமன் மகன் இறைத்த தண்ணி
    தில்லாலங்கிடி லேலம்
மஞ்சாத் தோட்டம் பாயுதோடி
   தில்லாலங்கிடி லேலம் குன்னோரம் கிணறு வெட்டி
    தில்லாலங்கிடி லேலம்
கொய்யாக் கொம்பு ஏத்தம் வச்சு
    தில்லாலங்கிடி லேலம்
கொழுந்தனாறு இறைக்கும் தண்ணி
    தில்லாலங்கிடி லேலம்
கொய்யாத் தோட்டம் பாயுதோடி
    தில்லாலங்கிடி லேலம்
மலையோரம் போற மாமா
    தில்லாலங்கிடி லேலம்
மயிலிரண்டு புடிச்சு வாய்யா
    தில்லாலங்கிடி லேலம் குன்னோரம் போற மாமா
    தில்லாலங்கிடி லேலம்
குயிலிரண்டு புடிச்சி வாய்யா
    தில்லாலங்கிடி லேலம்


சேகரித்தவர்: இடம்:


கவிஞர் சடையப்பன் அரூர், சேலம்.


கதிரறுப்பு

அறுவடைக்குக் கூட்டம் கூட்டமாக உள்ளுர் வேலையாட்க ளும் வெளியூர் கூலியாட்களுமாக வருவார்கள். கதிரறுத்து, கட்டுக்கட்டி, களத்துக்கு தூக்கிச் சென்று, வட்டம் உதறி, புணையாலடித்து, மணி தூவி, நெல்லைக் குவியலாகக் குவிப்பார்கள். ஆண்களும் பெண்களும் பலவிதமான இவ்வே லைகளில் ஈடுபடுவார்கள். சோர்வு தோன்றும்போது அறுவ டைப் பாடல்களைப் பாடுவார்கள். இப்பொழுது பாடல்கள் பாடுவது நின்று விட்டது.

இப் பாடல்களில் வேலையின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காதல், இனிமை இவற்றைப் பற்றியே