பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

      தமிழர் நாட்டுப் பாடல்கள்

    புள்ளிபோட்ட ரவிக்கைக் காரி 
    புளியங்கொட்டை சீலைக்காரி 
    நெல்லறுக்கப் போகும்போது நான் 
    நெல்லி மரக்காவலடி 
    கஞ்சிக்கலயங் கொண்டு 
    கருக்கரிவாள் தோளிலிட்டு 
    அறுப்பறுக்கப் போகும்போது 
    உன் இருப்பிடத்தைச் சொல்லிடடி


   சேகரித்தவர்:             இடம்: வாழப்பாடி சந்திரன்        வாழப்பாடி,
                           சேலம்.
   மாடு மேய்க்கும் சிறுவன்
    மாடு மேய்க்கும் சிறுவன் மாட்டுக்குத் தண்ணீர் காட்ட குளத்துக்கு வருகிறான். அவனுடைய காதலி படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாட்டைத் தப்ப விட்டுவிடுகிறான். மாடு தப்பிவிட்டதை அவள் சுட்டிக் காட்டுகிறாள். ஆனால் அவன் கவலைப்படவில்லை.


பெண்:

    மலைமேலே மாடு மேய்க்கும்
       மாட்டுக் காரச் சின்னதம்பி 
    மாடோடிப் போகுதடா
       மாமலைக்கு அந்தாண்டே

ஆண்:

    மாடோடிப் போனாலென்ன
      மற்றொருத்தி சொன்னாலென்ன 
    நீ குளிக்கும் மஞ்சளுக்கு நான் 
       நின்னு மயங்குரேண்டி


    உதவியவர்:            இடம்: வாழப்பாடி சந்திரன்  சேலம் மாவட்டம்.


    பொழுதிருக்க வந்து சேரும் 
    கணவன் மாடு பிடித்துக்கொண்டு மலைக்குப் போகிறான். மனைவி கைக்குழந்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்று வழியனுப்புகிறாள். மலையில் புல்