பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 429

     உழவும் தொழிலும் 

(குறிப்புரை: S.S. போத்தையா)

   முன்னத்தேராம் பின்னத்தேராம் 
   மூணேரும் தனதேராம் 
   கழுத்தேரு கட்டுமுன்னே 
   கண்டேனடி கருங்குயிலே 
   முன்னத்தி ஏருக்காரா 
   முறுக்கிவிட்ட மீசைக்காரா 
   நீ தொட்ட கருத்தப்பிள்ளை 
   நிண்ணு மயங்குதாளே 
   முன்னத்தி ஏருக்காரா 
   முதலாளி பண்ணைக் காரா 
   நீ தொட்ட கட்டப்புள்ள 
   நிண்ணு மயங்குதாளே 
   ஓடையிலே ஓரனேறு    
   ஒருத்தி மகள் கருத்தாளு 
   கருத்தாளு பேரு சொன்னா 
   கனகமணி ஓசையிடும் 
   மூணேறு கட்டியல்ல 
   முகமெல்லாம் தேர் ஓடி 
   கழுத்தேரு கட்டையிலே 
   கண்டேன் கருங்குயில 
   ஏரப்புடி இளையதம்பி 
   இளமயில நான் தொடர 
   இருக்கப் பறந்திராம 
   என்னருமைப் பசுங்கிளியே


    வட்டார வழக்கு: ஏரு-ஏர் கட்டையிலே-கட்டும் வேளையிலே பறந்திராம-பறந்துவிடாமல்.


  சேகரித்தவர்:             இடம்: S.S. போத்தையா       கோவில்பட்டி 
                          வட்டாரம்,
                 நெல்லை மாவட்டம்.


       நெல்லிமரம் காவல்


    அறுப்புக்குச் செல்லும் இளைஞன் தன் காதலியிடம் வேலை முடியும்போது தான் நிற்குமிடத்தைச் சொல்லிவிட்டு, அவளையும் எந்த இடத்தில் வேலை செய்வாய் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லுகிறான். A 519 – 28