பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434 தமிழர் நாட்டுப் பாடல்கள்

  பந்துபோல கொண்டைபோட்டு 
  பாத்திக்காடு வாரதெப்போ 
  கருவலம்பூ கட்டை வெட்டி 
  கைக்கிரண்டு பலகை சேர்த்து 
  இன்பமான பாத்திக்குள்ளே 
  தங்க நின்னு வாரேனே 
  சாப்பிட்டுக்கை கழுவி 
  சமுக்கத் துண்டு கையிலெடுத்து 
  வாராங்க எங்க மச்சான் 
  வரளி மணி உப்பளக்க 
  இரும்பு இரும்பு திராசிகளாம் 
  இந்திர மணி தொட்டிகளாம் 
  சரிபார்த்து திராசி விடும் 
  தங்க குணம் எங்கமச்சான் 
  கண்ணாடி கால் ரூவா 
  காவக் கூலி முக்கால்ரூவா 
  துப்புக் கூலி ஒத்தரூவா 
  துலங்குதையா மச்சாது அளம் 
  மதுரையிலே குதிரை வாங்கி 
  மல்லிகைப்பூ லாடம்கட்டி 
  அடிக்கிறாரையா கங்காணம் 
  அளத்து மண்ணு தூள் பறக்க 
  வேலை செய்யும் பாத்திக்காடு 
  விளையாடும் தட்டு மேடு 
  கூலி வாங்கும் கிட்டங்கிகளாம் 
  கூட்டம் போடும் சாயாக் கடைக 
  காலுலே மிதியடியாம் 
  கனத்த தொரு கங்காணி 
  நாவிலொரு சொல்லு வந்தா 
  நாலாயிரம் பெண் வருவோம்

வட்டார வழக்கு: மச்சாது-உப்பளச் சொந்தக்காரர் Machado. சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு மீளவிட்டான்,

                  துத்துக்குடி,
              நெல்லை மாவட்டம்.