பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

தமிழர் நாட்டுப் பாடல்கள்


நடவாத மாட்டோட நான்படும் பாட்டோட ஈரப்புழுங்கலோட என்னபாடு படுதாளோ!

வட்டார வழக்கு: இல்ல-இல்லை; ஒட-ஒடு; படு தாளோ-படுகிறாளோ,

சேகரித்தவர்: S.M. கார்க்கி

இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
உளியடிக்கும் ஆசாரி

தேர்ந்த பாறைகளின் உச்சிகளில் பழங்காலத்தில் சமணரும், பெளத்தரும் சிற்பங்கள் செதுக்கினர். சைவ, வைணவர்களும் கோயில்கள் அமைத்தனர். பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள் அமைத்தனர். கல் கட்டடங்களாகக் கோயில்கள் கட்டத் தொடங்கிய சோழர் காலத்தில் குகைக் கோயில்களை அமைப்பது நின்று விட்டது. அக் கலைத் தொழிலில் திறமையுடையவர்கள், வீட்டுக்குத் தூண்களுக்கு மட்டும் மலையில் உளியடித்துக் கல் வெட்டி வந்தனர். ஆனால் இப்பொழுது அதனையும் இயந்திரங்களும், வெடி மருந்தும் செய்து விடுகின்றன. கல்லில் கற்பனைக் கனவுகளை வடித்தெடுத்த சிற்பிகளின் பரம்பரை, கல் தச்சராகி, இப்பொழுது எத்தொழிலும் இன்றிப் பட்டினியால் வாடுகிறார்கள். பாறையுச்சியில் உளியடிக்கும் ஆசாரியின் காதலி கீழ்மலையில் வேலை செய்கிறாள். அவள்தான் அவருக்குச் சோறு கொண்டு போவாள். பசித்தபோது சப்தமாக உளியடித்தால் சோறு கொண்டு வருவதாக அவரிடம் சொல்லுகிறாள்.

உச்சி மலையிலேயே உளி படிக்கும் ஆசாரி சத்தம் போட்டு உளியடிங்க சாதம் கொண்டு நான் வருவேன்

சேகரித்தவர்: S.M. கார்க்கி

இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.