பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவும் தொழிலும்

439}}


ஆண்:பூனையை அடிச்சா
 பாவம் சுத்தும்
 போடி பொண் மயிலே


பெண்: பாவம் சுத்தினா
 காசிக்குப் போகலாம்
 வாடா என் சாமி!


ஆண்: காசிக்குப் போனா
 காலை நோகும்
 போடி பொண் மயிலே


பெண்:  காலை நொந்தால்
 குதிரை வாங்கலாம்
 வாடா என் சாமி


ஆண்: குதிரை வாங்கினா
 சவாரி செய்யலாம்
 போடி பொண் மயிலே


சேகரித்தவர்:
இடம்:
கவிஞர் சடையப்பன்
அரூர்,
தருமபுரி.


மானங்கெட்ட வண்டி

கிராமத்தில் ஒரு வண்டியை வைத்து வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறான் இவன். வண்டிக்கு மாடு வேண்டும். அவன் வீட்டில் சோற்றுக்கு இல்லை. மாட்டுக்கு வைக்கோல் எப்படி வாங்குவது? நகரத்துக்கு வண்டியோட்டி போனால் லாந்தர் வைத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் போலீஸ்காரன் தொந்தரவு செய்து காசு பிடுங்குவான். அதற்கு எண்ணெய் வேண்டும்; வைக்கோல் இல்லாத மாடு வண்டியிழுக்குமா?


இப்பாடு அவன் படும்போது மற்றொரு ஜீவனையும் நினைக்கிறான். ஈரப் புழுங்கலை வைத்துக்கொண்டு அவனுடைய மனைவி எப்படிச் சமையல் செய்யப் போகிறாளோ?


 வீட்டில் சோத்துக்கில்ல
 தீபத்துக்கு எண்ணெயில்ல
 மாட்டுக்கு வக்கலில்ல
 மானங் கெட்ட வண்டியடி