பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



448

தமிழர் நாட்டுப் பாடல்கள்


குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்த சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் 'பண்ணி' என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. பன்றி என்பது மக்களுக்குப் பிடிக்காது.

3

                மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி 
                மதினியை ஒரு சத்தம் போடாதடி 
                கோட்டாத்துத் திருநாள் வருதடி 
                கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி 
                வாடை முந்தும் கோடை முந்தும் 
                மாசி மாதம் கொண்டல் முந்தும் 
                காத்தடிச்சிக் கடல் கலங்கும் 
                கல்லு போட்டாத் தலை உடையும் 
                ஒடும் கடல் தனக்கு 
                உடையவளே எந்தனுக்கு 
                உல்லன் தட்டிப் பாயுதடி 
                ஒடப் படிகரை மடியை 
                உண்ணாமல் திண்ணாமல் 
                ஊர்ப்பயணம் போகாதடி 
                ஆளை எண்ணிப்படி போடம்மா 
                ஆரோக்கிய மாதாவே

4

               அல்லாவோட காவலுல 
               ஆபத் தொன்றும் வாராம 
               பெரிய உந்தன் காவலுல 
               பேதகங்கள் வராம 
               மரியே 
               உன் காவலுல 
               மனதிரக்கம் வைப்பாயே 
               காப்பாத்த வேணுமம்மா 
               கன்னிமரித்தாயே நீ 
               பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே