பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



450

தமிழர் நாட்டுப் பாடல்கள்


         கர்த்தா வே காத்தருளும் 
         காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு 
         கைக் குழந்தை வேணுமின்னு 
         தெற்கே திருப்பதியாம் 
         தேவ மாதா சன்னதியாம் 
         மறப் பதில்லை திருப்பதியை 
         மனப் பாட்டு முனைக் 
         குருசை குருசே உனைத் தொழுவேன் 
         கும்புடுவேன் ஆதரிப்பாய் 
         வேளையிது வேளையம்மா 
         வேளாங்கண்ணி மாதாவே 
         மாதாவே உன்னுதவி-உன் 
         மகனுதவி வேணுமம்மா 
         தாயே உனதடிமை 
         தற்காக்க வேணுமம்மா 
         நண்டு படும் தொண்டியடா 
         நகர படும் நம்புதாளை 
         நம்பிக்கை உண்டுமம்மா 
         நமக்குதவி நாயனுண்டு 
         நாயன் அருளாலே 
         நான் பாடவே துணிந்தேன் 
         நமக்குப் படைகளுண்டு 
         நாத சுரக் காரருண்டு 
         பிச்சிச் சரமோ-நீ 
         பின்னி விட்ட பூச்சரமோ 
         பூவைச் சொரிந்தவள். நீ 
         போன வழி வாராளடா 
         பச்சை மணக்குதடி 
         பாதகத்தி உன் மேலே 
         எல்லை கடந்தாளடி 
         இலங்கை வனம் கடந்தாள் 
         தில்லை வனம் கடந்தாள் 
         திருவணையும் குற்றாலம் 
         பாராமல் போராளடி 
         படமெடுத்த நாகம் போல

வட்டார வழக்கு பலவனுக்கு-பலவை நாக்கு; கோசு முன் வாயில் கட்டும் கயிறு, பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு, சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு: