பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



456

தமிழர் நாட்டுப் பாடல்கள்

                அரும மக தாலி வாங்க-ஒங்க 
                ஐவருக்கும் சம்மதமோ 
                குளத்துல புல்லறுத்து 
                கோரம்பா பந்தலிட்டு 
                குழந்தை மக தாலி வாங்க-ஒங்க
                கூட்டார்க்கும் சம்மதமோ? 

வட்டார வழக்கு : மருத-மதுரை; வச்ச-வைத்த.

குறிப்பு: தனது தகப்பனையும், சிற்றப்பன்மாரையும் பஞ்ச பாண்டவர்களுக்கு ஒப்பிடுகிறார்கள். தவிர நாயக்க மன்னரை வெகுகாலம் எதிர்த்த பஞ்ச பாண்டியர்கள் என்ற குறு நில மன்னர்களை மறவர்கள் தங்களது முன்னோரெனக் கருதுகின்ற னர். எனவே "ஐவர் என்றாள்.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி
நெல்லை
சீட்டைப் பறித்தானோ?

மனைவியும் கணவனும் செல்வத்தில் திளைத்து இன்ப வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பொருளுக்குச் சேதம் வராமல் அரண்மனையாரும், கும்பினியாரும் காவல் முறை செய்தனர். ஆனால் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த கால தூதரிடமிருந்து யார் அவள் கணவனைப் பாதுகாப்பது? கணவன் வீரமிக்கவன், எந்தத் திருடனாலும் அவன் கையிலுள்ளதைப் பிடுங்க முடியாது. எப்படித்தான் அவன் சீட்டை கால தூதர்கள் பறித்தார்களோ? ரயிலிலேறிப் போய்க் காலையில் ஓரிடத்திலும், மாலையிலும் மற்றோரிடத்திலும் களவு செய்யும் பக்காத் திருடர்களைவிட கால தூதர்கள் கடிய வேகத்தில் சென்று உயிரைத் திருடும் கள்வர்களோ என்று மனைவி கேட்கிறாள்.

                வெள்ளிச் சுருணை வரும் 
                விதமான நெல்லு வரும் 
                விதமான நெல் அவிக்க 
                மேகத்துத் தண்ணி வரும் 
                தங்கச் சுருணை வரும் 
                தனிச் சம்பா நெல்லு வரும் 
                தனிச்சம்பா நெல்லவிக்க 
                தந்தி மேல் தண்ணி வரும்!
                அல்லியும் கொய்யாவும்-அரமணையில்