பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒப்பாரி

457


                 அலுங்கப் பழுத்திருக்க 
                 அசையாம காலுவைக்க 
                 அரமணையார் காவலுண்டும் 
                 கொய்யாவும் பிலாவும் 
                 குலையாய் பழுத்திருக்க 
                 கூசாமல் காலு வைக்க 
                 கும்பினியார் காவலுண்டும் 
                 அடிக்க வந்த தூதுவரை 
                 அடியாள் சரணமின்னேன். 
                 கொல்ல வந்த தூதுவரை 
                 கோடி சரணமின்னேன் 
                 காலை ரயிலேறி 
                 கல்கத்தா போயிறங்கி 
                 காசப் பறிச்சானோ 
                 கைவிலங்கு போட்டானோ 
                 சிகப்பு ரயிலேறி 
                 சீமைக்கே போயிறங்கி, 
                 சீட்டப் பறிச்சானோ? 
                 சிறுவிலங்கு போட்டானோ

வட்டார வழக்கு : தந்திமேல் தண்ணி-அவசரமாக; தூதுவர்-எமதுதர்,

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி
நெல்லை

மதினி கொடுமை

கணவனையிழந்தவளுக்குப் பிறந்த வீட்டில் மதிப்பில்லை. அவ்வீட்டுச் சொத்து சுகங்களில் அவளுக்குப் பங்கில்லை. இதனால் புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு அஞ்சி, பிறந்த வீடு செல்லுவோம் என்றால் அங்கு அவளுக்கு வரவேற்பிராது. தண்ணிர் குடிக்கத் தூரத்திலுள்ள ஊற்றுக்குப் போனால் கூட நிரம்பத் தண்ணீர் குடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தலையாரியைக் கூட அனுப்புகிறார்கள். கணவனையிழந்த ஒருத்தி பிறந்த வீட்டு நிலைமையை எண்ணி அங்கு தன் மதனியார் தன்னை பெருஞ் சுமையெனக் கருதுவார்கள் என்பதை இலைமறை காயாகக் கூறுகிறாள்.