பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



458

தமிழர் நாட்டுப் பாடல்கள்

                   கள்ளிமேல் கத்தாழ 
                   கருணனெல்லாம் எம்பிறப்பு 
                   கருணனுக்கு வந்தவளே-என்னை 
                   மதிக்காளில்லே 
                   வேலி மேல் கத்தாழ 
                   வீமனெல்லாம் எம்பிறப்பு 
                   வீமனுக்கு வந்தவளே-என்னை 
                   விலையா மதிக்காளில்ல 
                   தண்ணி தவிச்சு-நான் 
                   தலைமலை ஊத்துக்கே போனாலும் 
                   தலைமலை ஊத்துலயே-எனக்கு 
                   தலையாளி காவலுண்டும் 
                   மெத்தத் தவிச்சு நான் 
                   மேமலை ஊத்துக்கே போனாலும் 
                   மேமலை ஊத்துலேயே-எனக்கு 
                   மெல்லியரே காவலுண்டும் 
                   பல்லிலிடும் பச்சத்தண்ணி 
                   பழனிமலைத் தீர்த்தம் என்பார் 
                   நாவிலிடும் பச்சத்தண்ணி 
                   நாகமலைத் தீர்த்தமென்பார்

வட்டார வழக்கு : எம்பிறப்பு - என் உடன் பிறந்தோர்; கத்தாழ-கற்றாழை; மதிக்காளில்லை-மதிக்கிறாள் இல்லை.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி
நெல்லை

ஆசையுண்டோ?

மங்கலப் பொருள்கள், மணம் வீசும் நறுமலர் இவையாவும் அவளுக்கு விருப்பமானவை. கணவன் இறந்ததும் இவற்றிற்கெல்லாம் இனி எனக்கு ஆசையுண்டோ? என்று கேட்கிறாள். கணவன் இறந்ததும் ஆசைகளும் இறந்துவிட வேண்டியதுதான். அது தான் சமூகச் சட்டம்.

                     பத்தடுக்குத் தாம்பாளம் 
                     பால்காப்பி நெய்த்தோசை 
                     பாத்துப் பலுமாற-அய்யோ 
                     பத்துமணியாகும்