இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒப்பாரி
459
பத்துமணியாகும்-அய்ய
பத்தரையும் பாசாகும்
எட்டடுக்குத் தாம்பாளம்
எடுத்துவைத்த நெய்த்தோசை
எடுத்துப் பலுமாற-ஐயா
எட்டு மணியாகும்
எட்டு மணியாகும்
எட்டரையும் பாசாகும்
கோட்டை வாசலிலே
கொழுந்து வந்து விக்குதிண்ணு
கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக்
கொழுந்து மேல் ஆசையுண்டோ
தெக்குக் கோட்டை வாசலில
செவந்தி வந்து விக்குதிண்ணு
சீமானத் தோத்தேன்-எனக்குச்
செவந்தி மேல் ஆசையுண்டோ
வடக்குத் தலை வாசலிலே
மருவு வந்து விக்குதுண்ணு
மன்னவரத் தோத்தேன்- எனக்கு
மருவு மேல் ஆசையுண்டோ
அஞ்சு படித் துறையும்
அத்தருடன் பன்னீரும்-நான்
அள்ளிக் குளிப்பாட்ட-நான்
அகலத்தாள் ஆயிட்டேனே!
தோட்டம் படித்துறையும்
துறைமுகத்துப் பன்னிரும்
தொட்டுக் குளிப்பாட்ட-நான்
தூரத்தாள் ஆனேனில்ல
பூத்த முருங்க
பொன்பதிச்ச மேடையில-நான்
பொன்பதிச்ச மேடையில
போக வர நீதியில்ல
காச்ச முருங்க
கல் பதிச்ச மேடையிலே
கல் பதிச்ச மேடையிலே-நான்
காலு வக்க நீதியில்ல
அரிராமர் கோட்டையில
அல்லி ஒரு பெண் பிறந்தாள்