பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 461 உருண்ட மணிகளாம் ஓச்சமிடும் மோட்டாராம் ஓச்சமிடும் மோட்டாரில் உக்காந்த மன்னரெங்கே? உண்மை சொன்ன டிரைவரெங்கே உருண்ட மணிகளெங்கே? ஓசையிடும் கார்களெங்கே? ஒசையிடும் காருக்குள்ள உட்கார்ந்த மன்னரெங்கே? உட்கார்ந்த மன்னருக்கு உத்திசொன்ன டைவரெங்கே? தங்க மணிகளெங்கே? தனிச்சு வந்த காரையெங்கே தனிச்சு வந்த காருக்குள்ள சாஞ்சிருந்த மன்னரெங்கே? சாஞ்சிருந்த மன்னருக்கு சாச்சி சொன்ன டைவரெங்கே? பொன்னு மணிகளெங்கே? போயி வந்த காரு எங்கே? போயி வந்த காருக்குள்ள போலீசார் மன்னரெங்கே? போலீசார் மன்னருக்கு புத்தி சொன்ன டைவரெங்கே? வெள்ளி மணிகளெங்கே? விசயனார் காரு எங்கே? விசயனார் காருக்குள்ளே வீத்திருந்த மன்னரெங்கே? வீத்திருந்த மன்னருக்கு வித்தை சொன்ன டைவரெங்கே? கூட்டத்த விலக்கி விடு கோட்டாரே என் தகப்பா! கோடி கொண்டு வந்த-எந்தனை கொண்டவர நான் பார்க்க. வட்டார வழக்கு: மணி-மாட்டுக்கு மணிபோலக் காருக்கு ஹார்ன்; ஓச்சம்-சப்தம்; டைவர்-டிரைவர் (பேச்சு) சேகரித்தவர்: இடம்: S.M.கார்க்கி சிவகிரி, நெல்லை. A 519 - 30