பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464 தமிழர் நாட்டுப் பாடல்கள்

     அருமை குறைந்தேன்
  தங்கச் சிணுக்குவரி 
  தணலடியா மைக்கூடு 
  தணலடிச்ச நேரமெல்லாம்-என் 
  தங்கநிறம் குண்ணிருச்சே 
  பொன்னும் சிணுக்குவரி 
  புகைபடா மைக்கூடு 
  புகைப்படா நேரமெல்லாம் 
  பொன்னு நிறம் 
  குண்ணிருச்சே 
    சாவுவரை துன்பம்
  போலீசார் தீர்மானம் 
  பொழுதடைஞ்சா தீருமண்ணே 
  பொண்ணடிமைத் தீர்மானம் 
  போய் முடிஞ்சாத் தீருமண்ணே 
  தாசில்தார் தீர்மானம் 
  சாயந்தரம் தீருமண்ணே 
  சண்டாளி தீர்மானம்-என் 
  தலைமுடிஞ்சால் தீருமண்ணே
         என் துயர்
  சந்தன நெல்லிமரம் 
  சாதிப்பிலா மரமே 
  தன்மைகளைச் சொல்லிட்டா 
  தாசில்தார் கச்சேரியும்   
  தானே புரண்டழுகும்   
  குங்கும நெல்லிமரம்    
  கோடிப் பிலா மரமே-நான் 
  கொடுமைகளைச் சொல்லிட்டா 
  கோட்டார் கச்சேரியும்      
  கூடப் புரண்டழுகும்
        பிறந்த வீடு
 பல்லு விளக்கி-நான் 
 பிறந்த இடம் போனாலும் 
 படியேறிப் போனாலும்-எனக்குப் 
 பல்லிலிடும் பச்சத் தண்ணி- 
 ஐயா