பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 465

பழனி மலைத் தீர்த்தமென்பார் 
நாவை விளக்கி நான்       
நடுத் தெருவே போனாலும் 
நாவிலிடும் பச்சத் தண்ணி- 
எனக்கு 
நாகமலைத் தீர்த்தமென்பார் 
புள்ளை இடுக்கி-நான்     
புறந்த எடம் போனாலும் 
புள்ளைக்குச் சீருண்டும் 
மத்தொரு நாள் தங்கலுண்டும் 
பிள்ளைக்குச் சீருமல்ல 
பின்னொரு நாள் தங்கலில்ல 
மக்களை இடுக்கி நான்  
மத்தொரு நாள் போனாலும் 
மக்களுக்குச் சீருண்டும்  
மத்தொரு நாள் தங்கலுண்டும் 
மக்களுக்குச் சீரில்ல    
மத்தொரு நாள் தங்கலில்ல இவளுக்குப் பிள்ளையில்லை, 

பிள்ளையிருந்து கணவன் இறந்த பின் பிறந்த வீடு போனால் ஒருநாள் தங்கச் சொல்லி பிள்ளைக்கு ஏதாவது சீர் கொடுப்பார்கள். என்னை யார் அழைத்து வீட்டிலிருக்கச் சொல்லுவார்கள் என்று ஏங்குகிறாள். தண்ணிர் கேட்டால் கூட ஒரு கரண்டி நீர் கொடுத்து 'இது அபூர்வமான கோயில் தீர்த்தம்' என்று சொல்லுவார்கள். அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள் என்று வருந்துகிறாள்.

     நானும் உழைத்தேன்

கத்திரியும் பாவையும் கலந்தேன் ஒரு பாத்தி கருணன் உடன் பிறந்து-நான் கசந்தேன் பிறந்தெடத்த வெள்ளரியும் பாவையும் வெதச்சேன் ஒரு பாத்தி வீமன் உடன் பிறந்து-நான் வெறுத்தேன் பிறந்தெடத்தெ வெள்ளைத் துகிலுடுத்தி-நான் வீதியில போனாக்க வெள்ளாளன் பிள்ளையென்பார் வீமனோட தங்கையென்பார்