பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466 தமிழர் நாட்டுப் பாடல்கள்

  இளமையில் தாய், தகப்பன், சகோதரர்களோடு இவளும் பிறந்த வீட்டு வயலில் பாத்திகட்டி கத்திரிச் செடியும் பாகைச் செடியும் பயிர் செய்து பாடுபட்டிருக்கிறாள். ஆனால் விதவையாகி பிறந்த வீட்டுக்குப் போனால், வெள்ளாளன் மகள்,  வீமன் தங்கை என்று ஊரார் அடையாளம் கண்டு கொள்ளுவார் கள். ஆனால் பிறந்த வீட்டில் தங்கி வாழ முடியுமா? 
    பட்டேன் படாத துயரம்!

மடிகட்டிக்கல் பெறக்கி மண்டலங்கள் உண்டுபண்ணி மண்டபமும் இங்கிருக்க மயில் போன மாயமென்ன கூட கொண்டு கல் பெறக்கி கோபுரங்கள் உண்டு பண்ணி கோபுரமும் இங்கிருக்க குயில் போன மாயமென்ன தூண்டா மணி விளக்கு சுவரோரம் நிண்ணெரியும் தூசி பட்டால் மங்காது- என்னோட துயரம் சொன்னால் மங்கிவிடும் காந்தா மணி விளக்கு கதவோரம் நின்னெரியும் காத்தடிச்சா மங்காது என்னோட கவலை சொன்னா மங்கிவிடும் பூத்த மரம் கீழிருந்து-என் பொண் பாட்டைச் சொல்லிவிட்டா பூத்த மரமெல்லாம் பூமாறிப் போயிடுமே காய்ச்ச மரம் கீழிருந்து-என் கவலையச் சொல்லி விட்டா காய்ச்ச மரமெல்லாம் காய் மாறிப் போயிடுமே

      கேள்வியில்லை

தங்க மலையிலேயே தரகறுக்கப் போனாலும்