பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474 இவை தமிழர் நாட்டுப் பாடல்கள் குழந்தை குடியிருந்தேன். கூடவித்துக் கல்லெறக்கி, கோபுரங்கள் உண்டு பண்ணி, கோபுரத்தின் கீழே-நான் குழந்தை குடி இருக்கேன். பொங்கி பொரிச்சுவச்சு-நான் புளியம் பூச் சோறாக்கி; பொங்கிய சோறு உங்கக்குள்ள-எனக்குப் போட்டானே கெடியாரம் ஆக்கி அடுக்கி வச்சு-நான் ஆவாரம்பூச் சோறாக்கி ஆக்கின சோறு உங்கக்குள்ள-எனக்கு அடிச்சானே கெடியாரம்: திடீர் நிகழ்ச்சி தாலியிண்ணாத் தாலி-நான் தங்கத்தால் பொன் தாலி தாலி கழற்றிட-எந்தன் தருமருக்கே சம்மதமோ குளத்தங்கரையோரம்-நான் குயிலுனு நிக்கையிலே - என்ன குயிலுனு பாராமே- என்னைக் குண்டால எய்தார்கள் ஆத்தங் கரையோரம்-நான் அன்னம் போல் நிக்கயில அன்ன மிண்ணும் பாராமல்- என்ன ஒரு அம்பால எய்தார்கள் கத்தரியும் பாவையும் காக்கும் படுவையிலே-நான் கர்ணனார் பெத்த மகள்-நான் கற்பனைக்கு ஆளானேன் வெள்ளரியும் பாகலும் விளையும் படுகையிலே-நான் வீமனார் பெத்த மகள்-நான் வெயில் படக் கண்டியளோ? வட்டார வழக்கு: சித்திரக்காலி, மணல்வாரி, உப்பூத்தி நெல்வகை உரைக்குங்குள்ளே-உரைப்பதற்குள்,