பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 479 அவள் அவ்வீட்டிலேயே கூலிக்காரியாகிறாள். இந்நிலையை எண்ணி அவள் பாடுகிறாள். மச்சு மச்சா நெல் விளையும் மகுடஞ்சம்பா போரேறும் மச்சாண்டார் கையாலே மாசப்படி வாங்கித்திங்க மாபாவி ஆனேனப்பா குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ்சம்பா போரேறும் கொழுந்தனார் கையாலே கூலிப்படி வாங்கித்திங்க கொடும்பாவி ஆனேனப்பா வட்டார வழக்கு : மகுடஞ்சம்பா, குமுடஞ்சம்பா-ஒரு வகை நெல். குறிப்பு: மைத்துனர் கொடுக்கும் மாதப்படி காணாமல் அவள் கூலிவேலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. கணவனுக்கு சொந்தமான நிலமிருந்தும் தனக்கு குழந்தையில்லாததால் சொத்தில் உரிமையில்லாமல், பிறருக்கு வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமையை எண்ணி விதவை வருந்துகிறாள். உதவியவர்: இடம்: நல்லம்மாள் சேலம் மாவட்டம் சேகரித்தவர்: கு. சின்னப்பபாரதி பஞ்சையானேன் முத்து மழை பேயும் மொத வாய்க்கால் தண்ணி வரும் மொத வாய்க்காத் தண்ணிக்குத்தான் மொளவு சம்பா நெல் விளையும் மொளவு சம்பா நெல்லுக்குத்தா மொதலாளியா நானிருந்தேன் எனக்கு வந்த சாமி சின்ன நடையிழந்து சிறு நாடு காலம் போவ மொளவு சம்பா நெல்லுக்கு