பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 481 குறிப்பு: எளங்கொடி, எனத்தார், எளப்பம்-முதல் ஒலி 'இ’ என்று கொள்க. உதவியவர்: இடம்: நல்லம்மாள் மாடகாசம்பட்டி, சேலம் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி செல்வி நான் புலம்புகிறேன் நமது பழைய சமூக வாழ்க்கையில் கணவனின் நிழல் மனைவி. அவளுக்கு இன்று எவ்வித சுகங்களும் இல்லை. கணவனோடு இருந்தால்தான் உலக இன்பங்களை அனுபவிக்க லாம். கணவன் மறைந்தால் அவை யாவும் அவளுக்கு இல்லை. ஆலம் பலவையிலே அரளிப்பூ மெத்தையிலே அருச்சனரும் தேவியுமாய் அருகிருந்து பேசிவந்தோம் அருச்சுனரு தப்பி விட ஆலம் பலவை விட்டே அரளிப்பூ மெத்தை விட்டே அல்லியு நா புலம்புகிறேன் சிவம் பலவையிலே செவந்திப்பூ மெத்தையிலே சீமான் தேவியுமாய் சேந்திருந்து பேசி வந்தோம் சீமானும் தப்பிவிட சீவம் பலவை விட்டே செவந்திப்பூ மெத்தை விட்டே செல்வியு நா புலம்புகிறேன் வட்டார வழக்கு : பலவை-பலகை; நா-நான். உதவியவர்: இடம்: சி. செல்லம்மாள் மாடகாசம்பட்டி சேகரித்தவர்: சேலம் மாவட்டம் : கு. சின்னப்ப பாரதி