பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 483 பாதுகாக்கும் வலிமையுடையவன் அல்லவே! சிறுநிலம் உடைய வர்களுடைய நிலத்தைப் பறித்துக்கொள்ள பெருநிலக்கிழார்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்வார்கள்? களத்தில் போர் போட்டிருக் கும்பொழுது மாட்டை விரட்டியடிப்பதும், விளைந்த வயலில் எருதை விரட்டியடிப்பதும், எதிர்த்து வந்தால் வழக்குப் போடுவதுமான முறைகளால் நிலத்தை தங்களுக்கே விற்றுவிடச் செய்வதும் அவர்கள் கையாளும் முறைகள். இச் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராட வலிமை வாய்ந்த ஆண்களாலேயே முடியாது. சிறுவன் என்ன செய்வான்? அவனுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையை தன் மீது சுமத்திவிட்டுக் கணவன் மாய்ந்து போய் விட்டானே! அக் கடமைகளை அவளால் நிறைவேற்ற முடியுமா? இச் சிந்தனை அவளுக்குக் கவலையை உண்டுபண்ணுகிறது. மத்தங்கா புல்லு வெட்டி மலையோரம் போர் போட மலையோரம் போரிலே தான் மாடு வந்து மேயுதிண்ணு மாதுளம்பூ சாட்டை கொண்டு மாட்டை விரட்டிவிட மைந்தன் சிறுவயசு-நான் மனசொடிஞ்சு போனேனே இஞ்சிக்கா புல்லு வெட்டி எடையோரம் போர்போட எடையோரம் போரிலேதான் எருது வந்து மேயுதிண்ணு எலுமிச்சங்க சாட்டை கொண்டு எருதை வெரட்டி விட என் செல்வம் சிறுவயசு-நா செருவடைஞ்சு போறேனே வட்டார வழக்கு : செருவடைஞ்சு-சோர்வடைந்து; மத்தங்கா-இஞ்சிக்கா, ஒரு வகை நெல்; மாதுளம்பூச் சாட்டை, எலுமிச்சங்க சாட்டை-சாட்டை கம்பின் நிறம் பற்றிப் பெயர் வந்திருக்கலாம். உதவியவர்: இடம்: நல்லம்மாள் மாடகாசம்பட்டி சேகரித்தவர்: சேலம் மாவட்டம் : கு. சின்னப்ப பாரதி