பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484 தமிழர் நாட்டுப் பாடல்கள் புகைபோகச் சன்னலுண்டு வீட்டில் புகைபோகச் சன்னலுண்டு. ஆனால் அவள் உள்ளத் கிளர்ச்சிகளுக்கு வெளியீடு காணச் சன்னல்கள் இல்லை. எத்தகைய இன்ப அனுபவங்களும் அவளுக்கு விலக்கப்பட்டவை. வெளியே தலை நீட்டினால் பாவி என்று உலகம் சொல்லுகிறது. உணவு உண்பது தவிர வேறு அனுபவம் அவளுக்குக் கிடையாதா? பொன்னு அடுப்பு வச்சு பொங்க வச்சேன் சாதங்கறி பொங்கி வெளியே வந்தா பொகை போவச் சன்னலுண்டு பொங்கி வெளியே வந்தா புருசனில்லாப் பாவியென்பார் ஆக்க அடுப்புமுண்டு அனலும் போவ சன்னலுண்டு ஆக்கி வெளியே வந்தா அரசனில்லாப் பாவியென்பார் வட்டார வழக்கு: பொகை-புகை, போவ-போக (பேச்சு). உதவியவர்: இடம்: செல்லம்மாள் மாடகாசம்பட்டி சேலம் மாவட்டம். சேகரித்தவர்: L-10 கு. சின்னப்ப பாரதி பனிக்காத்தும் வீசலாச்சு கணவன் அவளுக்கு ஒர் கருங்கல் மாளிகை. அவன் உயிரோடு இருக்கும் வரை எறும்பும் காற்றும் நுழையாமல் பாதுகாக்கும் கருங்கல் கோட்டையாக அவன் அவளைப் பாதுகாத்தான். அவன் போய்விட்ட பிறகு முன்பிருந்த மண்குடிசையில் தான் வாழ்கிறாள். ஆனால் அதைச் சுற்றியிருந்த கருங்கல் சுவர் தகர்ந்துவிட்டது. ஊர்ப்பேச்சும், பிறர் கண்களும் அவளைத் துளைக்கத் தொடங்கும். இவை தான் எறும்பும், காற்றும். அவனிறந்ததும்தான் அவனுடைய பாதுகாப்புத்திறன் அவளுக்குப் புரிகிறது.