பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 485 எட்டுக் கெசம் கல்லொடச்சு எறும்பேறா மாளி கட்டி எறும்பேறா மாளியிலே இருந்தொறங்கும் நாளையிலே எறும்பும் நொழையாது எதுக்காத்து விசாது சின்ன நடையிழந்து சிறுமுழியும் பஞ்சடைய எறும்பும் நுழையலாச்சு இருபக்கமும் பேசலாச்சு பத்துக் கெசம் கல்லொடச்சு பாம்பேறா மாளிகை கட்டி பாம்பேறா மாளியிலே படுத்தொறங்கும் வேளையிலே பாம்பும் நொழையாது பனிக்காத்து விசாது அண்ணாந்து கண்ணசைந்து ஆவாரம் பூ வாய்மூடி அமக்களமாப் போறான்னு பாம்பும் நொழையலாச்சு பனிக்காத்தும் வீசலாச்சு வட்டார வழக்கு: நொழை-நுழை; அமக்களமாய்-மேள தாளத்தோடு சுடுகாடு நோக்கிச் செல்லுகிறான்; காத்து-காற்று (பேச்சு). உதவியவர்: இடம்: நல்லம்மாள் மாடகாசம்பட்டி சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி வளத்தாரை இழந்தவள் தந்தை இறந்துபோனார். மகள் அயலூரில் இருந்து வந்திருக்கிறாள். இதுவே அவள் தந்தைவீட்டுக்கு வருவது கடைசி முறையாக இருக்குமோ? இனி எப்பொழுதாவது இவ்வூருக்குப் போகவேண்டுமென்று வாடகை வண்டி பேசச் சொன்னால், கணவனும் பிறரும் என்ன சொல்லுவார்கள்? பெற்றோரை இழந்தபின் பிறந்தவீட்டு ஆசை எதற்கு என்று