பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486 தமிழர் நாட்டுப் பாடல்கள் கேட்க மாட்டார்களா? மதினியாருக்குக் கேட்கட்டும் என்று தான் மகள் இவ்வாறு ஒப்பாரி சொல்லி அழுகிறாள். வண்ண சைக்கிள் வண்டி வாடவை மோட்டார் வண்டி-நான் பிறந்த வடமதுரை போறமிண்ணு வாடவை பேசுமிண்ணா வழியிலே உள்ளவர்கள் வளத்தாரே இழந்தவங்க வாடவைக்கு ஆசை என்ன? வடமதுரைச் சோலி என்ன? சின்னச் சைக்கிள் வண்டி தீருவை மோட்டார் வண்டி தென்மதுரை போறமிண்ணு தீருவை பேசிமிண்ணா தெருவிலே உள்ளவர்கள் தேட்டாரை இழந்தோர்க்கு தென்மதுரைச் சோலி என்ன திருவை ஆசை என்ன? வட்டார வழக்கு : வாடவை - வாடகை, வளத்தார்பெற்றார்; தேட்டார்-பெற்றோர்; சோலி-மேலை; தீருவை உதவியவர்: இடம்: நல்லம்மாள் மாடகாசம்பட்டி சேகரித்தவர்: சேலம் மாவட்டம் கு. சின்னப்ப பாரதி பொண்ணாள் படும் துன்பம் நோயாளியான ஒருவனுக்கு மணம் பேசி வந்தார்கள். பெண்ணின் தந்தை பொருளுக்கு ஆசைப்பட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். திருமணமான சிறிது காலத்துக்குள் நோயாளி இறந்தான். சவ அடக்கத்துக்குப் பெண்ணின் தந்தை வந்திருக்கிறார். கலியாணம் முடிவு செய்யும் காலத்தில் தன் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத தந்தைக்கு இப்பொழுது சூடு கொடுக்கிறாள் மகள். மதியம் கிளம்பி வரும் மாய இருட்டுக் கட்டி வரும்