பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உதவியவர்: செல்லம்மாள் சேகரித்தவர்: ஒப்பாரி - 487 மறிநாட்டு ராஜமன்னன் மாலை கொண்டு வந்ததும் வண்டரிச்ச மாலையிண்ணு வாங்கி எறியாமே-நீங்க வளத்த மயிலாளுக்குச் சூடினதால் மாலைபடும் தொந்திரவு இன்னைக்கு மயிலிவாட நேர்ந்ததுவே. பொழுது கெளம்பி வரும் பொன்னிருட்டுக் கட்டி வரும் பொற நாட்டு ராசமன்னர் பூக்கொண்டு வந்ததும்-நீங்க புழுவறித்த பூவுண்ணு புடுங்கி எறியாமே நீங்க தேடிய பொண்ணாளுக்குச் சூடினதால் பூப்படும் தொந்தரவு-உங்களுட பொண்ணாள் பட நேர்ந்ததுவே. இடம் மாடகாசம்பட்டி சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி சீரான தாயிழந்தோம்! தாயின் அன்பிற்கு ஈடானதோர் செல்வம் உண்டா? மழை பெய்து ஆற்றில் தண்ணிர் வந்தால் மீன் பிடித்து தம்பியின் மூலம் மகளுக்குக் கொடுத்தனுப்புவாள் தாய். இன்று தாய் இறந்துவிட்டாள். இனி தம்பி மீன் கொண்டு வருவானோ? தாய் இறந்துபோன பின்பு அண்ணன் தம்பி என்ற உறவு நிலைக்குமா? வடக்கே மழை பேயும் வண்ணாறு தண்ணி வரும் வண்ணாத்துத் தண்ணியிலே வாழை மீனுத் துள்ளி வரும் வாழை மீனு அரிச்செடுக்க வண்ணப் பொறப்பிழந்தேன் வரிசையுள்ள தாயிழந்தேன் தெற்கே மழை பேயும்