பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488 தமிழர் நாட்டுப் பாடல்கள் சின்னாறு தண்ணி வரும் சித்தாத்துத் தண்ணியிலே சிறு மீனு துள்ளி வரும் சிறு மீனு அரிச்செடுக்க சின்னப் பொறப் பெழந்தேன் சீரான தாயிழந்தேன் வட்டார வழக்கு: பொறப்பு-சகோதரன். உதவியவர்: இடம்: ஜானகி சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி பிறந்த வீட்டில் நடந்தது பெண்ணின் தாய் தந்தையர் இறந்து விட்டனர். பிறந்த வீட்டில் அண்ணனும் மதினியும் வாழ்கிறார்கள். அண்ணன் ஆதரவாக இருந்தாலும் மதினி கடுமையாக இருக்கிறாள். தாய் தந்தையர் இருக்கும்பொழுதே மதினிக்கு இவள் வீட்டிற்கு வருவது பிடிக்காது. தாய் தந்தையர் மறைவுக்குப் பிறகு அவ் வீட்டில் என்ன மதிப்பிருக்கும் என்று அவள் எண்ணிப் பார்க்கிறாள். அண்ணன் வேலையாக வெளியே போய்விடுவார். மதினிதான் வீட்டிலிருப்பாள். அவள் தன் மீது அன்பு காட்டுவாளா என்று எண்ணிப் பார்க்கிறாள். இவ்வெண்ணங்களெல்லாம், பெற்றோரை இழந்த துன்பத்தோடு கலந்து ஒப்பாரியாக உருவாகிறது. கம்பு விளைஞ்சிருக்கும் காலியுமே சாஞ்சிருக்கும்-நான் கரிக்குருவி வேஷங் கொண்டு காலியுமே அண்டினா கருணையண்ணன் பெண்டாட்டி காதத்துக் கொரு கல்லெடுத்து கடக்க விரட்டி விட்டாள். கருணையண்ணன் கண்டு விட்டா கான மயிலின்னு கழுத்தோ டனைச்சிடுவார் கழுத்து முத்தம் தந்திடுவார் சொகுசான சீமையிலே சோளம் விளைஞ்சிருக்கும்