பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 489 தோகையுமே சாஞ்சிருக்கும் தோக்குருவி வேஷம் கொண்டு தோகையில் அண்டினாலும் துரைமார் பெண்டாட்டி தோட்டம் ஒரு கல்லெடுத்து தூரத் தொரத்தி விட்டாள் துரைமார் கண்டு விட்டா தோளோடணைத்து தோள் முத்தம் தந்திடுவார். வட்டார வழக்கு : காலி-ஆடு, மாடுகள்; தோகை-கதிர்; துரைமார்-சகோதரர்கள்; தொரத்தி-துரத்தி (பேச்சு). உதவியவர்: இடம்: செல்லம்மாள் மாடகாசம் பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி பவுனும் மங்கியாச்சு கணவன் இருக்கும் வரை, இன்பம் நிறைந்த சிறப்பான வாழ்க்கை அவளுக்கிருந்தது. அவன் இறந்தபின் அவளுடைய வாழ்க்கை ஒளி மழுங்கிப் போயிற்று, இதனை அவள் 'பட்டு நனைந்து விட்டது, ' 'பவுன் மங்கிவிட்டது' என்ற உவமைகளால் புலப்படுத்துகிறாள். பச்சை ரயிலு வண்டி பட்டணத்துப் பொட்டி வண்டி பட்டை உடுத்தியல்லோ பவுன் நவை தான் பூட்டி நீங்கள் உள்ள பட்டணத்தை பார்க்க வந்துட்டா பட்டணமே பேயும் மழை பட்டு நனையாது பவுனுமே மங்காது-நீங்க போவ பட்டு நனைஞ்சாச்சு. பவுனுமே மங்கலாச்சு சின்ன ரயிலுவண்டி சீரங்கத்துப் பொட்டி வண்டி சீலையே உடுத்தி அல்லோ