பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சிறு நவை போட்டுமல்லோ சீரங்கம் வந்து விட்டா சீலை நனையாது சிறு நகையும் மங்காது-நீங்க போவ மட்டு நனைஞ்சாச்சு பவுனுமே மங்கியாச்சு

வட்டார வழக்கு; நவை-நகை; பொட்டி-பெட்டி (பேச்சு)

உதவியவர்: இடம்: சி. செல்லம்மாள் மாடகாசம்

                      பட்டி,

சேகரித்தவர்: சேலம் மாவட்டம் கு.சின்னப்ப பாரதி

  தாலியைத் திருடி விட்டார்’!

கணவன் இளவயதிலேயே இறந்துவிட்டான். அவனோடு வாழ்ந்த வாழ்வையும், இறப்பையும் எண்ணி மனைவி மருகுகிறாள். இச்சிறப்புக்கெல்லாம் காரணம் தனது தாலி என்று அவள் எண்ணினாள். தனது தாலிபாக்கியம் நீடித்து நிற்கும் என்று நம்பியிருந்தாள். ஆனால், பெருந்திருடர்களான எம தூதுவர்கள் அவளுடைய தாலியைத் திருடி விட்டார்கள். அது முதல் அவள் வாழ்விழந்தவளாக, உலக, இன்பத்திற்குத் தகுதியற்றவளாக ஆகிவிட்டாள். இந்நிலையை எண்ணி அவள் சொல்லுகிறாள்.

ஆச்சா மரமே அறுபதடிக் கம்பமே பட்டுக் கயிறே பனைமரத்துக் குஞ்சரமே கண்ணே கண்மணியே கல்கண்டு சர்க்கரையே மெத்தக் களஞ்சியமே விலைமதியா மாணிக்கமே எண்ணெய்க் கறுப்பே இரும்பான நெஞ்சகமே செப்பேடு போட்டல்லவோ சிங்க முகத் தூண் நிறுத்தி எப்போதும் போல