பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சிற்றாடை கட்டும் பொன்னு, சிறு சலங்கை கட்டும்பொன்னு சிறுசிலே அறுப்பேன் என்று சிவன் இட்ட கட்டளையோ பாவாடை கட்டும் பொன்னு, பாதரசம் போடும் பொன்னு பாதியிலே அறுப்பேன் என்று எனக்குப் பகவான் இட்ட கட்டளையோ கத்திரிக்காய் பச்சை நிறம் நான் கர்ணன் உடன் பிறந்தாள் கர்ணனுட தேவியாலே நான் கவலைக்கு ஆளானேன் வெள்ளரிக்காய் பச்சை நிறம் நான் வீமனுடப் பிறந்தாள் வீமனுட தேவியால நான் வேசடைக்கு ஆளானேன் அல்லியும் பிலாவும் என்னப் பெத்த அம்மா அலுங்கப் பழுத்தாலும் அஞ்சாமல் கால் வைக்க அரண்மனையர் காவலுண்டு கொய்யாவும் பிலாவும் குலுங்கப்பழுத்தாலும் கூட்டத்தார் காவலுண்டு சீரகம்பூக்க சிறுமுருங்கை பிஞ்சுவிட சீருவிடும் தாயாரை நான் சீமைக்கே அனுப்பி வைத்தேன் கடுகு பூப்பூக்க - கர்ணனெல்லாம் எம் பிறவி கர்ணனுக்கு வாச்சவக என்னைக் காசா மிதிக்கவில்லை

வட்டார வழக்கு: அரண்மனையர், கூட்டத்தார்-மதினியின் உறவினர்.

சேகரித்தவர்: இடம்: குமாரி பி.சொரணம் சிவகிரி,

                    நெல்லை 
                    மாவட்டம்.