பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒப்பாரி 497

  மறைந்தோடி ஏன் போனீர்?
மாமனார் இறந்து போகிறார். அவருடைய பிள்ளைகளிடையே சண்டை சச்சரவு ஏற்படாமல், எல்லோருக்கும் புத்தி சொல்லி குடும்பத்தை சீராக நடத்தச் சொன்னார் அவர். பேரக் குழந்தைகளை ஆதரித்துப் புத்தி கூறினார். அவர் இறந்ததும், அவருடைய குடும்பத் தலைமையைப் புகழ்ந்து மருமகள் ஒப்பாரி சொல்லுகிறாள்.

வளர்த்தும் சமர்த்தர்களே வல்லாமைக் காரர்களே பிள்ளைகளை ஆதரிச்சே வந்த புண்ணியர்க்குப் புத்தி சொன்னீர்-நீங்கள் பிள்ளைகளை வீதி விட்டு பிரிந்தோடி முன் போனீர் மக்களை ஆதரிச்சீர் மன்னவர்க்கே புத்தி சொன்னீர் மக்களைக் கடத்தி விட்டு மறந்தோடி ஏன் போனீர்

வட்டார வழக்கு : புண்ணியர், மன்னவர்-இவளுடைய கணவனைக் குறிக்கும்.

குறிப்பு: முதலிரண்டு அடிகள் மாமனாரை அழைக்கும் விளி.

உதவியவர்: இடம்: ஜானகி சேலம் சேகரித்தவர்: மாவட்டம் கு. சின்னப்ப பாரதி

     இங்கிலீசுக்காரியாலே
    இறந்தாரே நம்ம துரை
சிவகிரி ஜமீன்தார் ஒரு இங்கிலீஷ்காரியின் உறவால் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறந்து போனார். அவளுக்கு ராணிப்பட்டம் வேண்டும் என்று கேட்டாளென்றும், அது முறையல்லவென்று சொன்ன பின்பு அவள் கோபித்தாளென்றும் இப்பாடல் கூறுகிறது. அவருடைய மறைவுககு வருத்தம்